×

ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரத்திற்கு கல்லூரி முதல்வர் மறுப்பு!!

செங்கல்பட்டு: ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரத்திற்கு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். தாடியை எடுக்கச் சொல்லி நிர்பந்திப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் பாஸ்கர், “”செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் பயிலும் ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் தாடி வளர்க்க தடை விதிக்கவில்லை. சாதி மத அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆடை விவகாரத்தில் மாணவர்கள் நன்னடத்தையை பின்பற்றுமாறு பொதுவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரத்திற்கு கல்லூரி முதல்வர் மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Jammu-Kashmir ,Chengalpattu ,Principal ,Chengalpattu Medical College ,Jammu and ,Kashmir ,Medical College ,Bhaskar ,Jammu ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!