×

“இது நவீன ஊழலின் சாதனை” – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் ஏமாற்று நாடகம் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் “இது நவீன ஊழலின் சாதனை” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது. அது நவீன அறிவியலின் சாதனை.

மும்பையிலிருக்கும் பாரத ஸ்டேட் வங்கி டில்லியிலிருக்கும் உச்சநீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.

48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை #SBI. இனி பின்னொட்டாக #ModiKaParivar ஐ இணைத்துக் கொள்ளட்டும்” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே “மோடி அரசு தனது ஊழலை மறைக்க பாரத ஸ்டேட் வங்கியைப் பயன்படுத்த முயல்கிறது” எனவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post “இது நவீன ஊழலின் சாதனை” – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Su.Venkatesan ,CHENNAI ,State Bank of India ,S. Venkatesan ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை