- காவிரி
- மணல்
- புதுக்கோட்டை மாவட்டம்
- எம் மணல்
- உடன் மக்கள்
- முதல்வர்
- புதுக்கோட்டை
- கலெக்டர்
- மெர்சி ரம்யா
- முதல்வர் உடன் மக்கள்
- உடன்
- அமைச்சர்
- தின மலர்
புதுக்கோட்டை, மார்ச் 5: ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 21 முஸ்லிம் மகளிருக்கு தலா ரூ.5,700 வீதம் ரூ.1,19,700 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது;
பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.96,011 வீதம் ரூ.24,00,275 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில், ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 21 முஸ்லிம் மகளிருக்கு தலா ரூ.5,700 வீதம் ரூ.1,19,700 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.
மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கபாடி, கால்பந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு, கபடி போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000-மும் மற்றும் கால்பந்து போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000-மும் மற்றும் கையுந்துபந்து போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000-மும் என மொத்தம் ரூ.2,40,000 மதிப்பிலான பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 2021-ல் ரூ.5,88,000 நிதி வசூல் புரிந்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (ஓய்வு) சுப்பையா மற்றும் 2020-ல் ரூ.3,50,740-ம், 2021-ல் ரூ.3,60,222-ம் நிதி வசூல் புரிந்த உதவித் திட்ட அலுவலர் ராஜேந்திரன் ஆகிய அலுவலர்களுக்கு, மேதகு ஆளுநர் தலைமைச் செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வுகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்.உலகநாதன்;, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் திரு.கேப்டன். விஜயகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி மணல் தட்டுப்பாட்டால் கூடுதல் விலைக்கு விற்கப்படும் எம் சாண்ட் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு 21 முஸ்லிம் பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் appeared first on Dinakaran.