×

அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளில் 114 புதிய இடங்களுக்கு அனுமதி

சென்னை: ‘அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்’ என்ற அரசின் அறிவிப்புக்கு ஏற்ப நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், அதற்கான பராமரிப்பு பதிவேடுகளை தலைமை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் 2023-2024ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப் ளப்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் கடந்த மாதம் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி,அரசு மற்றும் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 175 மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகள், மற்றும் தலா 35 மாணவர்கள் கொண்டுள்ள பள்ளிகள் என இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கெனவே தோற்றுவிக்கப்பட்ட பாடங்்களுக்கான பணியிடங்களை தவிர்த்து மீதம் உள்ள பாடங்களுக்கு கூடுதலாக 114 ஆசிரியர் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 114 பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களின் விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் புதிய பணியிடங்களுக்கான பள்ளியின் அளவை பதிவேட்டில் பதிவு செய்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். இவ்வாறு தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

The post அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளில் 114 புதிய இடங்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Primary ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...