×

அரசு அனுமதியின்றி இடங்களின் பெயரை மாற்றினால் 3 ஆண்டு சிறை: மணிப்பூர் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவையில் முதல்வர் பைரன் சிங்,‘‘மணிப்பூர் இடங்களின் பெயர்கள் 2024 மசோதா” என்ற மசோதாவை முன்மொழிந்தார். அப்போது பேசிய முதல்வர், ‘‘மணிப்பூர் மாநில அரசு நமது வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் முன்னோர்கள் கடந்து வந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது. ஒப்புதல் இல்லாமல் இடங்களின் பெயர்களை மாற்றுவது, தவறாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு சட்டரீதியாக கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார். பின்னர் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாவின்படி, அரசின் ஒப்புதல் இல்லாமல் கிராமங்கள், இடங்களின் பெயர்களை மாற்றுபவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசு அனுமதியின்றி இடங்களின் பெயரை மாற்றினால் 3 ஆண்டு சிறை: மணிப்பூர் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur Assembly ,Chief Minister ,Byron Singh ,Manipur state government ,
× RELATED மணிப்பூர் பாஜ தலைவர் காங்கிரசில் இணைந்தார்