- பாஜக கூட்டணி பஞ்சாயத்து
- அமித் ஷா
- மும்பை
- சிவசேனா
- முதல் அமைச்சர்
- ஏக்நாத் ஷிண்டே
- பாஜக
- துணை
- பத்னாவிஸ்
- தேசியவாத காங்கிரஸ்
- அஜித் பவார்
- மக்களவை
- மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக (துணை முதல்வர் பட்நாவிஸ்), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார்) கூட்டணி ஆட்சி மாநிலத்தில் நடக்கிறது. லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆனால் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 10 தொகுதிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் தங்களுக்குதான் வேண்டும் என்று கேட்பதுதான் பிரச்னைக்கு காரணம். அந்த பஞ்சாயத்தை தீர்ப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா வந்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால், இந்த பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. தேர்தல் பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வந்துள்ளார். தேர்தல் அட்டவணை வெளியாகும் முன், கூட்டணி தொகுதி பங்கீட்டை அவர் தீர்ப்பார்’ என்றனர்.
The post மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணி பஞ்சாயத்து: விரைந்தார் அமித் ஷா appeared first on Dinakaran.