×

திண்டுக்கல்லில் வருவாய் துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல், மார்ச் 6: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் இரவு, பகல் என தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி வாழ்த்துரை வழங்கினார்.

போராட்டத்தில் வருவாய் துறை அலுவலகங்களில் பணியிறக்கம், பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலியிடம் நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட முழுவதும் 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் வருவாய் துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul Revenue Department ,Dindigul ,Dindigul Collector's Office ,Revenue Department Officers' Association ,John Bast ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...