×

மல்லையா, நிரவ் மோடி, பிரிஜ் பூஷன் ஆகியோர் மோடி குடும்பத்தில் உள்ளனரா?.. காங்கிரஸ் கேள்வி

புவனேஸ்வர்: மோடி குடும்பத்தில் மல்லையா, பிரிஜ்பூஷன், நிரவ் மோடி ஆகியோர் உள்ளனரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் பேசும்போது,’ பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை’ என்று கூறியதை தொடர்ந்து பா.ஜ தலைவர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் மோடி குடும்பம் என்று பதிவிட்டனர். நாட்டு மக்கள்தான் என் குடும்பம் என்று பிரதமர் மோடியும் பேசினார்.

இதுபற்றி நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: வேலையின்மை காரணமாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் யாருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்?. இன்று மோடி குடும்பம் என்கிறார்கள்.

அப்படியானால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொந்தவு பிரச்னையில் சிக்கிய பிரிஜ் பூஷன் சரண் சிங், மேற்குவங்கத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பவன் சிங், வங்கி பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோரும் மோடி குடும்பத்தை சேர்ந்தவர்களா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

The post மல்லையா, நிரவ் மோடி, பிரிஜ் பூஷன் ஆகியோர் மோடி குடும்பத்தில் உள்ளனரா?.. காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Mallya ,Nirav Modi ,Brij Bhushan ,Modi ,Congress ,Bhubaneswar ,Brijbhushan ,Bihar ,Chief Minister ,Lalu Prasad Yadav ,PM Modi ,BJP ,
× RELATED நடிகை ஹேமாமாலினி, பிரிஜ் பூஷண் மகன் வெற்றி