×

சில கிரிமினல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள்: கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பெண் நெகிழ்ச்சி

தும்கா: பிரான்சை சேர்ந்த தம்பதியினர் நேபாளத்தின் வழியாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்திருந்தனர். கடந்த வெள்ளியன்று இரவு ஹன்ஸ்திஹா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குருமாஹத் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கினார்கள். அப்போது கணவரை தாக்கிவிட்டு கும்பல் ஒன்று அவரது மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தம்பதியினர் நேற்று பீகார் வழியாக நேபாளம் புறப்பட்டு சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு பெண், ‘‘இந்திய மக்கள் நல்லவர்கள். அவர்களை நான் குறைகூறவில்லை. நான் கிரிமினல்களை குற்றம்சாட்டுகிறேன்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் என்னை மிகவும் நன்றாக நடத்தினார்கள். என்னிடம் அன்பாக நடந்து கொண்டார்கள். நாங்கள் கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் சுமார் 20ஆயிரம் கிலோமீட்டர் சுற்றுப்பயணம் செய்துள்ளோம். எங்கும் எங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

முதல் முறையாக இது நடந்துள்ளது.பெண்கள் இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள பயிற்றுவித்துக்கொள்ளுமாறு நான் கூற விரும்புகிறேன். இதுபோன்ற சூழல்கள் கடினமானது மற்றும் எளிதானது அல்ல என்பது எனக்கு தெரியும். ஆனால் கடந்த காலத்தில் அவற்றை விட்டுவிட முயற்சிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து நல்ல நினைவுகள் எனக்கு இருக்கிறது. எனது கணவருடன் சுற்றுப்பயணத்தை தொடருவேன்” என்றார்.

The post சில கிரிமினல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள்: கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பெண் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dumka ,France ,Jharkhand ,Nepal ,Kurumahat ,Hanstiha ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை