×

தோடர் பழங்குடியின மக்களின் மேய்ச்சல் நிலங்களை மீட்டு தர வலியுறுத்தல்: ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பு

 

ஊட்டி, மார்ச் 6: வனத்துறை ஆக்கிரமித்துள்ள தோடர் பழங்குடியின மக்களின் மேய்ச்சல் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அடையாளகுட்டன் மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் மூத்த குடிமக்களாகிய தோடர் பழங்குடியின மக்கள் பல்வேறு மந்துகளிலும் (கிராமங்களிலும்) வசித்து வருகிறோம்.

எங்கள் மந்துகளில் உள்ள மேய்க்கால் நிலங்களை வனத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நாங்கள் வளர்த்து வரும் எருமைகளுக்கு போதிய மேய்ச்சல் நிலம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எருமைகளை குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு எங்களது மேய்ச்சல் நிலங்களை மீட்டு தர வேண்டும்.

மேலும், எங்களது விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றுவதற்கு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, அனைத்து மந்துக்களிலும் புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வராமல் கட்டுப்படுத்த வேண்டும்.

அனைத்து மந்துக்களிலும் வாழும் மக்களுக்கு முறையான மற்றும் சுத்தகிரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்பிஎப் பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள எங்களது கோயிலின் வடிவம் அருகில் உள்ள பெண் சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களது மந்துகளுக்கு செல்லும் சாலைகள் மோசமாக உள்ளது. எனவே, இதனை சீரமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

The post தோடர் பழங்குடியின மக்களின் மேய்ச்சல் நிலங்களை மீட்டு தர வலியுறுத்தல்: ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tamil Nadu Highlands People's Association ,Indukuttan ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...