×

மிளகு அடை

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1/2 கப்
கருப்பு உளுந்து (உடைத்தது) – 1/4 கப்
மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
கறிவேப்பிலை – 20 இலைகள்
தேங்காய்த் துருவல் – 1 கப்
தேங்காய் எண்ணெய், உப்பு –
தேவையான அளவு.

செய்முறை:

இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்தம்பருப்பை அளந்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தைச் சேர்த்து கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸி ஜாரில் வடிகட்டிய அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். மேலும் 1.5 கப் தண்ணீர் விட்டு கலக்கவும். அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.தோசைக்கல் சூடானதும் 1.5 கரண்டி மாவை எடுத்து தோசை போல் இடவும். தேங்காய் எண்ணெய்யை சுற்றி விடவும். அடை பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு 1 நிமிடம் நன்கு முறுகியதும் எடுக்கவும்.

The post மிளகு அடை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...