×

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து பிரச்சாரம்: பா.ஜ.க.வினர் 3 பேர் சஸ்பெண்ட்

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து பிரச்சாரம் செய்த பா.ஜ.க.வினர் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் நமச்சிவாயத்தை எம்.ஜி.ஆர்.போல சித்தரித்து பா.ஜ.க. பிரமுகர்கள் பிரச்சாரம் செய்தது சர்ச்சையானது. புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து பிரச்சாரம் செய்த பா.ஜ.க.வினர் 3 பேரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பா.ஜ.க. பொதுச்செயலாளர் மோகன்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தலைமையின் அனுமதியின்றி செயல்பட்ட K.விஜயபூபதி, J.ராக் பெட்ரிக், K.பாபு இவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இவர்களுடன் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து பிரச்சாரம்: பா.ஜ.க.வினர் 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : MGR ,Jayalalithaa ,Puducherry ,BJP ,Jayalalitha ,Minister ,Namachivayam ,Dinakaran ,
× RELATED பதவி வெறியில் கட்சியை கபளீகரம் செய்த...