×

தொழில் நண்பன் சந்திப்பு கூட்டத்தின் மூலம் 177 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை

சென்னை: தொழில் நண்பன் சந்திப்புக் கூட்டத்தில் 177 மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள குறைகளை கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டு நேற்று சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டம் அனைத்து சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிப்காட் தொழில் பூங்காக்களில் தொழிற்சாலை நடத்துபவர்கள் மற்றும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். தலைமை அலுவலகத்திலிருந்து தனித்தனி கண்காணிப்பு அலுவலரால் அங்கு தொழிற்சாலை நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு அவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டன.

14 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தொழில் நண்பன் சந்திப்பு கூட்டத்தின் மூலம் மொத்தம் 177 மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவ்வப்பொழுது, தொழில் முனைவோர்கள் மற்றும் பொது மக்கள், சிப்காட் தொழில் பூங்காக்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

The post தொழில் நண்பன் சந்திப்பு கூட்டத்தின் மூலம் 177 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,Chipkot Industrial Parks ,Chipkot ,
× RELATED தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற...