×

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம்: மேயர் துவக்கி வைத்தார்


கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம், மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பால.கலைக்கோவன் ஏற்பாட்டில் நடந்த ரத்த தான முகாமில் நாடும் நமதே, நாற்பதும் நமதே என நம் முதல்வர் குறிப்பிட்டதை குறிக்கும் வகையில் 40 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. காமிற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். முகாமில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர திமுக செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், தனஞ்ஜெயன், மருத்துவ அணி அமைப்பாளர்கள் டாக்டர் செல்வம், டாக்டர் சிவசெந்தில், டாக்டர் அருண், துணை அமைப்பாளர்கள் டாக்டர் அக்‌ஷயா, டேவிட், இளங்குமரன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திக், இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக்கேயன், நிர்வாகி செந்தில், நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயமணி,

துணை அமைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், குப்புராஜ், ராம்குமார், கோபி,கடலூர் அரசு தலைமை மருத்துவமனை தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், ரத்த மைய டாக்டர் குமார், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் திருமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ழாவில் திருவாரூர் கர்ப்பிணி தாய்மாரை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள், ரத்த தானம் வழங்கிய இளைஞர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேயர் பாராட்டி சிறப்பு செய்தார்கள்.

The post கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம்: மேயர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,East ,District ,DMK Madhya Rani Youth Team ,Blood Donation Camp ,Cuddalore East district ,DMK Madhya Rani youth ,DMK ,Dr. ,Bala Kalaikovan ,Naduum Namade ,Napadhum Namade ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!