×

பெங்களுரூ ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு NIAக்கு மாற்றம்!

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1ம் தேதி மதியம் 1 மணிக்கு, 10 நொடி இடைவெளியில் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 10 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குண்டு வெடிப்புக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

இதனிடையே இந்த வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்க வேண்டிய தேவைப்பட்டால் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்படும் அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இனி என்.ஐ.ஏ விசாரிக்கும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

The post பெங்களுரூ ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு NIAக்கு மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Rameshwaram Cafe ,Bangalore ,Bangalore Rameswaram ,Cafe ,National Intelligence Agency ,Hotel ,Kundalahalli, Bangalore ,Bangalore Rameshwaram Cafe ,NIA ,Dinakaran ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு:...