×

பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சை

ஈரோடு: பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம் குன்றி ஒரு யானை கீழே படுத்து கிடந்ததை கண்ட வனத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது கீழே படுத்து கிடந்த 40 வயது பெண் யானை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து தாய் யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் யானையை சுற்றிசுற்றி வந்த 2 மாத குட்டி யானை தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குட்டி யானைக்கு லாக்டோஜன் திரவ உணவு வழங்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Pannari forest ,Erode ,Satyamangalam Tigers Archive Forest ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...