×

”உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” புதுக்கோட்டை நகரில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி துவக்கம்

புதுக்கோட்டை, மார்ச்4: பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன், பாஜக – அதிமுக கூட்டணி செய்த துரோகங்களிலிருந்து மக்களை பாதுகாக்க திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் \”உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்\” சுவரொட்டிகளை மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் செல்லபாண்டியன் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள கடைகளில் ஒட்டி தொடங்கி வைத்தார். திமுகவினர் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று திமுக அரசின் சாதனைகள், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வழங்கினர்.

அதில் தமிழ்ப் புதல்வன் திட்டம் – 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை, ரூ.360 கோடி ஒதுக்கீடு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள், 5 லட்சம் ஏழைக்குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப்பணி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு, 15,280 வருவாய் கிராமங்களில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் என திமுக அரசின் பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் நகர செயலாளர்.செந்தில், பாலு உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

The post ”உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” புதுக்கோட்டை நகரில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Dravida model government ,BJP ,AIADMK ,India ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் அரசு, இன்னும் பல...