×

62,177 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து எதிர்காலம் சிறப்பாக அமைய கல்வியே சிறந்த அரணாக அமையும்

நாகப்பட்டினம், மார்ச் 4: நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்களம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மும்பெரும் விழா நடந்தது. பட்டதாரி ஆசிரியர் காந்தி வரவேற்றார். ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். டிஆர்ஓ பேபி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், கலை நிகழ்ச்சி வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:
அழிஞ்சமங்களம் அரசு பள்ளி 102 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மைக்கான பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்து வருகிறது. மாணவர்களின் கல்விக்காக பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி மாணவர்களை கவனிக்க வேண்டும். தங்களது குழந்தைகளை செல்போனுக்கோ அல்லது வீடியோ கேம் ஆகியவற்றிற்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களை தங்களது குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது. கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 மணி நேரம் வீட்டில் நன்றாக படிக்க வேண்டும். ஒழுக்கமுள்ள மாணவர்களாக விளங்க வேண்டும். சமுதாய வளர்ச்சியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தனது எதிர்காலம் சிறப்பாக அமைய கல்வியே சிறந்த அரணாக அமையும். எனவே உங்கள் குடும்ப வளர்ச்சியிலும் இந்த பள்ளி வளர்ச்சியிலும் சமுதாய வளர்ச்சியிலும் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

இடைநிலை ஆசிரியர் அன்புச்செல்வன் ஆண்டு அறிக்கை வாசித்தார். இடைநிலை ஆசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post 62,177 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து எதிர்காலம் சிறப்பாக அமைய கல்வியே சிறந்த அரணாக அமையும் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Achinjamangalam Government Primary School and High School Jubilee Ceremony ,Gandhi ,Primary School ,Headmaster ,Chitra ,High ,School ,Veerappan ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்