×

அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை மே 31 அன்று பணிவிடுப்பு செய்ய வேண்டும்: இணை இயக்குநர் உத்தரவு

 

நாகர்கோவில், மார்ச் 4: தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற துறைகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு துறை மாறுதல் மூலம் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிய உரிய தடையின்மை சான்று பெற்று மாறுதல் மூலம் பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்த கலந்தாய்வு அட்டவணைப்படி கடந்த 17.8.2023 அன்று அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வாயிலாக நடைபெற்று முடிந்துள்ளது. இக்கலந்தாய்வில் தொடக்க கல்வி அலகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிய இக்கலந்தாய்வில் கலந்துகொண்டு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்றவர்களுக்கு உடனடியாக அந்த ஆணையை உரிய ஆசிரியர்களுக்கு சார்பு செய்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளி கல்வித்துறைக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை இக்கல்வியாண்டு முடியும் வரை பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31ம் தேதி அன்று உரிய அலுவலர்களால் பணி விடுப்பு செய்திடவும், மாறுதல் பெற்ற உயர், மேல்நிலை பள்ளிகளில் பள்ளி திறக்கும் நாளன்று பணியில் சேரும் வகையில் பணி விடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை மே 31 அன்று பணிவிடுப்பு செய்ய வேண்டும்: இணை இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tamil ,Nadu ,Joint Director ,School ,Education ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...