×

மஞ்சூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதி

 

மஞ்சூர்,மார்ச்.4: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே போதிய மழை பெய்யவில்லை. மேலும் கடந்த நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை பனியின் தாக்கம் கடுமையாக இருந்தது. மழையின்மை மற்றும் பனியின் தாக்கத்தால் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியின் முக்கிய தொழிலான தேயிலை மற்றும் மலைகாய்கறி விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது.

வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது.மரம்,செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து கருகி போயுள்ளது. இதனால் காட்டு தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு போயுள்ளதால் குடிநீர் மற்றும் இரைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகிறது.இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பகல் நேரங்களில் வெயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை 10மணி முதல் மாலை 4மணி வரை வெயில் சுட்டெரிக்கிறது.

சமவெளி பகுதிகளுக்கு இணையாக மலை பிரதேசமான மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் கவலையடைய செய்துள்ளது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வரை இருந்த பருவநிலை மாறி தற்போது வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம் பெருமளவு மரங்கள் வெட்டப்பட்டும், காடுகள் அழிக்கப்பட்டு அங்கு காங்கிரீட் வீடுகள் அதிகளவு உருவானதே காரணம் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post மஞ்சூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதி appeared first on Dinakaran.

Tags : Manjur ,Manjoor ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை