×

கலைஞர் நினைவிடத்தில் கோவை திமுக கலைஞர்கள் பறையிசைத்து நடனம்

 

தொண்டாமுத்தூர், மார்ச் 4: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள், துணை தலைவர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநில செயலாளர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளையொட்டி மூத்த ஆதிதிராவிடர் மக்களுக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வழக்கறிஞர் தென்னை சிவா, தலைவர் பிஆர் வேலுச்சாமி, கெம்பனூர் சஞ்சய், முனுசாமி, அன்னூர் ஆறுச்சாமி, முரளிதரன், தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், அருள்ராஜ், கொள்ளுபாளையம் சண்முகம், மணி மோகன், வக்கீல் பஞ்சலிங்கம், கோவை மாநகர் மாவட்ட அமைப்பாளர் டெம்போ சிவா, ஜார்ஜ் ரவிச்சந்திரன், ராஜன் ஆகியோர் தலைமையில் தொண்டாமுத்தூரில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் தாரை தப்பட்டை கலைஞர்களுடன் பஸ்ஸில் சென்னை சென்றனர்.

விழா துவங்கும் முன்பு தாரை தப்பட்டை அடித்து உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர். தொடர்ந்து அவர்களது மூன்று வருட கனவான கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்டனர். 30 நிமிடம் மட்டும் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் சுமார் 3 மணி நேரம் தாரை தப்பட்டை அடித்து ஆயிரம் ஆண்டு பழமையான தங்களது இசை மற்றும் நடனமாடி சென்னை மக்களை மகிழ்வித்தனர்.

The post கலைஞர் நினைவிடத்தில் கோவை திமுக கலைஞர்கள் பறையிசைத்து நடனம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,DMK ,Thondamuthur ,DMK Adi Dravidar Welfare Committee District ,Anna Vidyalaya, Chennai ,State Secretary ,Krishnasamy MLA ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!