- பெங்களூர் வெடிப்புச்
- என்.ஐ.ஏ.
- முதல்வர்
- சிக்கமகளூரு
- முதல் அமைச்சர்
- சித்தராமையா
- துணை
- டி.கே.சிவகுமார்
- பெங்களூரு
- முதல்வர் சித்தராமையா
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டத்துக்கு வந்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதையொட்டி, வீட்டு வசதி குடியிருப்பு பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்த முதல்வர் சித்தராமையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது. பெங்களூரு வெடி விபத்து மிகவும் வருந்தத்தக்க விஷயம். பொதுமக்களை பாதுகாப்பது எங்களுடைய குறிக்கோள். பாஜவினர் இதை அரசியலாக்கி வருகின்றனர்.
பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்துவருகின்றனர். விசாரணை இப்போதுதானே தொடங்கியுள்ளது. இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்க வேண்டிய தேவைப்பட்டால் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்படும். இதை என்ஐஏவிடம் கொடுத்து விசாரிக்க உட்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாங்கள் தற்போது இந்த வழக்கை சிசிபி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இது சாதாரண விஷயம் என அவர்கள் பேசலாம். பொதுமக்களின் நலன் கருதி இதை சிசிபி விசாரணைக்கு கொடுத்துள்ளோம் என்றார்.
குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை குறித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், இந்த வழக்கை விசாரிக்க காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பெங்களூருவின் நன்மதிப்பை காக்க மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்திவருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்; செய்யலாம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
The post பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; தேவைப்பட்டால் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்படும்: முதல்வர் சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.