×
Saravana Stores

12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: கலியுக வைகுண்டமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன்படி சனிக்கிழமையான நேற்று 70,442 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 30,867 பக்தர்கள் தலைமுடி காணிக்ைக செலுத்தினர்.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் ₹3.60 கோடி காணிக்கையாக கிடைத்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றுகாலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்ய இயலும். ஆனால் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Swami ,Kaliyuga Vaikundam ,Tirupati Esumalayan Temple ,
× RELATED திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு?