×

தும்மனட்டியில் முதல்வர் பிறந்த நாள் விழா

ஊட்டி, மார்ச் 3: தும்மனட்டி திமுக கிளை சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா நடந்தது. விழாவிற்கு விவசாய அணி துணை அமைப்பாளர் ஜோகி தலைமை வகித்து திமுக கொடிேயற்றினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், கிளை செயலாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார். விழாவில், பரசுராமன், மடியன், மணிகுண்டன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முடிவில், கணேசன் நன்றி கூறினார்.

The post தும்மனட்டியில் முதல்வர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tummanati ,Ooty ,Tamil Nadu ,Stalin ,DMK ,Jogi ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...