×

எடக்காட்டில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர் ஊட்டியில் ரூ.4.75 லட்சத்தில் சிறுதானிய உணவு அங்காடி திறப்பு

ஊட்டி, மார்ச் 3: ஊட்டி சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் மதி சிறு, தானிய உணவு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து இந்த சிறு தானிய அங்காடியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 30.03.2023 அன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முழுவதும் சிறுதானிய உணவு அங்காடிகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவு அங்காடி அமைத்து விற்பனை செய்திட ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் மதி சிறுதானிய உணவு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுதானிய அங்காடி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த சிறுதானிய உணவு அங்காடியானது வளரும் மங்கையர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இந்த சிறுதானிய உணவு அங்காடியில் பாரம்பரிய உணவு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை, வரகு மற்றும் குதிரை வாளி போன்ற சிறுதானியங்களை கொண்டு உணவு வகைகள் சமைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வளரும் மங்கையர் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறுதானிய உணவு தயாரிப்பில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் ஆவர். இந்த அங்காடி மூலம் கிடைக்கும் வருமானம் குழுவில் உள்ள 12 உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இனி வருங்காலத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வேறு எந்த அரசு அலுவலகத்தில் அலுவலக கூட்டம் நடைபெற்றால் சிறுதானிய உணவு மட்டுமே அங்கு பரிமாற முன்வர வேண்டும். பொதுமக்களும் மறந்து போன நமது பண்டைய உணவுப் பொருட்களான சிறுதானிய உணவுப் பொருட்களை உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கௌசிக், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காசிநாதன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம் (ம) விற்பனை) கிருஷ்ணமூர்த்தி, உதகை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஷ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, முத்து, குமாரவேல், அருண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், மோகன குமார மங்கலம் மற்றும் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எடக்காட்டில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர் ஊட்டியில் ரூ.4.75 லட்சத்தில் சிறுதானிய உணவு அங்காடி திறப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,DMK ,Edakat ,Ooty ,Tamil Nadu State Rural Urban Livelihoods Movement ,Makalir Project ,Charing Cross Boomalai Commercial Complex ,Chief Minister ,Alternative ,Dinakaran ,
× RELATED வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக...