×

கல்பாக்கத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி

ராமேஸ்வரம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப் போவதாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலை துவக்கவிழா நாளை (மார்ச் 4) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு எரிபொருள் மறுசுழற்சி உலையின் இயக்கத்தை துவக்கி வைக்கிறார். நாளை வருகை தரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதன் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ கூறுகையில், ‘தமிழக மீனவர்கள் தாக்குதல், சிறைபிடிப்புகள் குறித்து ஒன்றிய அரசுக்கு பலமுறை தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரியும் இதுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. இதனால் பிரதமர் மோடி, ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 4ல் (நாளை) கல்பாக்கம் அணுமின் நிலையம் நிகழ்ச்சிக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்,’என்றார்.

The post கல்பாக்கத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி appeared first on Dinakaran.

Tags : MODI ,KALPAKAT ,Rameshwaram ,All India Fishermen's Congress ,President ,Kalpakkam Nuclear Power Station ,Kalpakkam Nuclear Plant ,Kalpakath ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...