×

அவங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டாங்க… மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த பாஜ தவறி விட்டது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் ட்விட்டர் பதிவில், “மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சியில் 16 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின்கீழ் சராசரி உற்பத்தி வளர்ச்சி சரிந்தது ஏன்? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 7.85 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு பாஜ ஆட்சியில் கிட்டத்தட்ட 6 சதவீதமாக குறைந்துள்ளது.

2022ம் ஆண்டுக்குள் உற்பத்தி துறையில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னீர்களே அந்த வேலைகள் எங்கே? கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தி துறையில் பணியாளர்கள் ஏன் குறைந்துள்ளனர்? இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பாஜ அரசு தவறி விட்டது.
ஜவுளித்துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கான 96 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தில் பெரும்பாலானாவை செயல்படவில்லை என்பது உண்மை தானே? முக்கிய துறைகளுக்கான நிதி குறைவாக பயன்படுத்தப்படுவது ஏன்? ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 549 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி விகிதம், மோடி ஆட்சியில் வெறும் 90 சதவீதமாக சரிந்தது எப்படி?

எல்லைப் பிரச்னைகளை கடந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கல்வானில் 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்த பிறகும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது 45 சதவீதம் அதிகரித்திருப்பது பாஜவின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க மதிப்பு கூட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அது செய்யப்பட்டது. தற்போதும் காங்கிரசால் மட்டுமே அதை செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

The post அவங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டாங்க… மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த பாஜ தவறி விட்டது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Baj ,Congress ,New Delhi ,Mallikarjuna Kharge ,BJP ,Modi ,
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...