×

குழந்தைகள் நலக்குழுவில் உறுப்பினர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம் மார்ச் 3:குழந்தைகள் நலக்குழுவில் உறுப்பினர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகைள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுக்களில் காலியாக உள்ள உறுப்பினர் பணியிடம் 1-க்கு கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நலக்குழுவில் காலியாக உள்ள உறுப்பினர் பணியிடம் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது.

இப்பதவி அரசுப் பணி அல்ல. விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒருநபர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி விகிப்பார். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) இயக்குநர், சமூகப்பாதுகாப்புத்துறை, எண்.300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600010 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

The post குழந்தைகள் நலக்குழுவில் உறுப்பினர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Child Welfare Committee ,Kanchipuram ,Kanchipuram Collector ,Collector ,Kalachelvi Mohan ,
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்