×

₹2.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், மார்ச் 3: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியில் இருந்து 65 மூட்டை கொப்பரையை கொண்டு வந்து குவித்தனர். இதில், முதல் ரகம் கிலோ ₹72.80 முதல் ₹83.10 வரையிலும், இரண்டாம் ரகம் ₹60.25 முதல் ₹70.10 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ₹2.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், அடுத்த ஏலம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்றும் சங்க மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹2.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED ₹3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்