×

நெற்பயிர்களை சேதப்படுத்தி 5 காட்டு யானைகள் அட்டகாசம் இழப்பீடு வழங்க கோரிக்கை பேரணாம்பட்டு, குடியாத்தம் அருகே

பேரணாம்பட்டு, மார்ச் 3: பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் அருகே 5 காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், மா மற்றும் தென்னை மரக்கன்றுகளை தேசப்படுத்தியுள்ளது. பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி, ரங்காம்பேட்டை, சாரங்கள், அரவாட்லா, பாஸ்மர்பெண்டா, சிந்தக்கணவா, எருக்கம்பட்டு, பத்தலபல்லி மற்றும் டிடி மோட்டூர் போன்ற கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகள் தேடி அவ்வப்போது கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பேரணாம்பட்டு அடுத்த ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சிகாமணி, கோகலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர்களின் நிலத்தில் 4 பெரிய யானைகள், ஒரு குட்டி உட்பட 5 காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சாப்பிட்டு மிதித்து சேதப்படுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து அருகில் உள்ள சதாசிவம் என்பவரின் நிலத்தில் 10 மா, 10 தென்னை மரங்கள் மற்றும் அதன் குருத்து, கிளைகளையும் உடைத்து சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளது. அப்போது சத்தம் கேட்டு வெளிவந்த அப்பகுதியினர் இதை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வர நேரம் ஆனதால் விவசாயிகள், பொதுமக்கள் சேர்ந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் சுமார் 1 மணிநேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அதனை தொடர்ந்து காலை வனத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் காட்டு யானைகள் சேதப்படுத்திய விளை நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதேபோல் குடியாத்தம் அடுத்த அங்கனம்பள்ளி கிராமத்திலும் புகுந்த யானைகள் அங்கு பயிரிட்டு வளர்ந்த ெநற்பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.

The post நெற்பயிர்களை சேதப்படுத்தி 5 காட்டு யானைகள் அட்டகாசம் இழப்பீடு வழங்க கோரிக்கை பேரணாம்பட்டு, குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Kudiattam ,Peranampatu ,Dinakaran ,
× RELATED குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து..!!