×

பாகிஸ்தானில் இன்று புதிய பிரதமர் தேர்வு: ஷெபாஸ் ஷெரீப்புக்கு மீண்டும் வாய்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். பாகிஸ்தானில் பிப்.8ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதால் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன.

இரு கட்சிகள் சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னாள் பிரதமரும், நவாஸ் ஷெரீப் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டுள்ளார். இம்ரான் கட்சி சார்பில் ஓமர் அயூப் கான் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் நடக்கும் ஓட்டெடுப்பு அடிப்படையில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதே போல் வருகிற 9ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் ஆசிப் அலி சர்தாரி(68) அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரானின் கட்சியின் சார்பாக பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் மம்முத் கான் அச்ஹாக்சாய் அதிபர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

பலுசிஸ்தான் முதல்வர் தேர்வு
பலுசிஸ்தான் மாகாணத்தின் முதல்வராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சர்பிராஸ் பக்டி நேற்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

The post பாகிஸ்தானில் இன்று புதிய பிரதமர் தேர்வு: ஷெபாஸ் ஷெரீப்புக்கு மீண்டும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Shebaz Sharif ,Islamabad ,Nawaz Sharif ,Pakistan Muslim League ,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...