×

இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு கண்டனம்..!!

டெல்லி: 10 இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரத் மேட்ரிமோனி செயலி, ஜீவன் சாதி, 99 ஏக்கர்ஸ், நாக்ரி, ஷாதி டாட் காம் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இன்ஃபோ எட்ஜ், ட்ரூலி மேட்லி உள்ளிட்ட இந்திய செயலிகளையும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலிகள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட இந்திய செயலிகளை உடனே ப்ளே ஸ்டோரில் சேர்க்க கூகுளுக்கு ஐ.ஏ.எம்.ஏ.ஐ. வலியுறுத்தியுள்ளது.

 

The post இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Web and Mobile Association of India ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...