×

மக்களவைத் தேர்தல்… தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாமக, தேமுதிக; தமாகா – பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரம்!!

சென்னை : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். கேட்டுள்ள தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், அதிமுக கூட்டணி தொடர்பாக தேமுதிக , பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளும் 1 மாநிலங்களவை பதவி கேட்டுள்ள நிலையில், அதனை அதிமுக திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே மக்களவைத் தேர்தலில் ஈரோடு, திருப்பூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பாஜகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான பேச்சுவார்த்தைக்குழு இன்று தமாகா அலுவலகம் சென்று கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது.

The post மக்களவைத் தேர்தல்… தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாமக, தேமுதிக; தமாகா – பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரம்!! appeared first on Dinakaran.

Tags : Adimuka ,Bamaka ,Demutika ,Tamaga-BJP ,Chennai ,Tamil Nadu ,Dimuka ,ZHAVURIMI PARTY ,DIMUKA KOTTANI ,Palamaka ,Demudika ,Tamaga ,BJP ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்