×

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை ரூ. 2 முதல் ரூ. 5 வரை உயர்த்தியது ஆவின் நிறுவனம்!

சென்னை: ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை ரூ. 2 முதல் ரூ. 5 வரை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (மார்ச் 3) முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்‌ ஆவின்‌ நிறுவனம்‌ நாளொன்றுக்கு சுமார்‌ 31 இலட்சம்‌ லிட்டர்‌ பாலும்‌ மற்றும்‌ 200 க்கும்‌ மேற்பட்ட பால்‌ உபபொருட்களை விற்பணை செய்து வருகிறது. ஆவின்‌ நெய்‌ மற்றும்‌ வெண்ணெய்‌ வகைகள்‌ மிகுந்த தரத்துடன்‌, குறைந்த விலையில்‌ விற்பனை செய்யப்படுவதால்‌ பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதன்‌ தேவை அதிகரித்த வண்ணம்‌ உள்ளது.

இந்நிலையில் ஆவின் ஐஸ்கிரீம் விலையை உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், ball – வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை உயர்த்துகிறது ஆவின் நிறுவனம். 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. 65 எம்.எல். சாக்கோ பார் விலை ரூ.20ல் இருந்து ரூ.25ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை ரூ. 2 முதல் ரூ. 5 வரை உயர்த்தியது ஆவின் நிறுவனம்! appeared first on Dinakaran.

Tags : Aavin ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...