×

முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

 

கோவை, மார்ச் 2: தமிழ்நாட்டில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊயதிம் என்ற கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மணிகூண்டு பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu ,Coimbatore Manikoondu ,
× RELATED வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்