×

படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு: பெரம்பலூர் ரோவர் பள்ளி சாதனை

 

பெரம்பலூர்,மார்ச்2: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு நடைபெற்றது. இதில் ரோவர் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 41 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். அதில் 34 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை பெற்று தந்துள்ளனர்.

இதில் எட்டாம் வகுப்பு பி பிரிவு மாணவிகள் எஸ், கிருத்திகா (143/180)என். நர்மதா (143/180) ஆர். ஆகாஷ் ராஜ் (143/180) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரிய பெருமக்களையும் நிர்வாகத்தின் சார்பில் ரோவர் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே வரதராஜன் பாராட்டினார். இந்த தேர்வில் ரோவர் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு: பெரம்பலூர் ரோவர் பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Tags : Perambalur Rover School Achievement ,PERAMBALUR ,Rover School ,Perambalur Rover School ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை