×

ஹெலிகாப்டரில் பறந்த பொதுத்தேர்வு வினாத்தாள்

சுக்மா: சட்டீஸ்கரில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டது.  சட்டீஸ்கரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. அங்குள்ள, சுக்மா மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகம். இதனால், மாவட்டத்தின் ஒரு பகுதியில பொதுத்தேர்வை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

ஜாகர்குண்டாவில் உள்ள பள்ளிக்கு வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஜாகர்குண்டாவுக்கு ஹெலிகாப்டரில் வினாத்தாள் எடுத்துச்செல்லப்பட்டது. அங்குள்ள பள்ளியில் மொத்தம் 10 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை நேற்று எழுதினர். இன்று தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாளும் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வை 16 மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு முன் வினாத்தாளை பத்திரமாக அனுப்ப முடியாததால், ஜாகர்குண்டா பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள வேறு ஊருக்கு சென்று தேர்வு எழுதி வந்தனர். கடந்த ஆண்டு முதல்முறையாக முந்தைய காங்கிரஸ் அரசு ஹெலிகாப்டரில் வினாத்தாள்களை அனுப்பியது. இந்த ஆண்டும் அதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஹெலிகாப்டரில் பறந்த பொதுத்தேர்வு வினாத்தாள் appeared first on Dinakaran.

Tags : Sukma ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...