×

தகாத உறவை கைவிட மறுத்த கணவரின் காதலிக்கு கத்திக்குத்து போலீசில் மனைவி சரண்

நாட்றம்பள்ளி: தகாத உறவை கைவிட மறுத்த கணவரின் காதலியை கத்தியால் சரமாரி குத்திவிட்டு அவரது மனைவி போலீசில் சரணடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா கேத்தாண்டபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(40). இவரது மனைவி சவுந்தரி(36). அதே பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி(40). இவர் தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், வள்ளிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாம். இதையறிந்த சவுந்தரி வள்ளியை கண்டித்துள்ளார். ஆனால் இதை கண்டுக்கொள்ளாமல் வள்ளி, ஆறுமுகத்துடன் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரி நேற்று முன்தினம் வள்ளியின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சவுந்தரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வள்ளியின் கழுத்தை அறுத்துவிட்டு, வயிற்றில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த வள்ளி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைபார்த்த சவுந்தரி அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த வள்ளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே தப்பியோடிய சவுந்தரி கத்தியுடன் அம்பலூர் காவல்நிலையத்தில் நேற்று சரணடைந்தார். இதைடுத்து போலீசார், அவரை நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சவுந்தரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகாத உறவை கைவிட மறுத்த கணவரின் காதலிக்கு கத்திக்குத்து போலீசில் மனைவி சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Nadrampalli ,Arumugam ,Kethandapatti, Natrampalli taluk ,Tirupathur district ,Soundari ,Valli ,
× RELATED சிறப்பு புலனாய்வு குழுவினர் முன்...