×

அனலாக தொடங்கும் கோடை காலம்: வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: இவ்வாண்டு இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தைவிட அனலாக தொடங்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல் நினோ எனப்படும் பசிபிக் கடல் வெப்ப நீரோட்ட நிகழ்வு நடப்பு கோடையிலும் நீடிக்கும். தெலுங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும். அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பமும் குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

The post அனலாக தொடங்கும் கோடை காலம்: வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,Pacific Ocean ,El Niño ,Telangana ,Andhra ,North Inner Karnataka ,Marathiam ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...