×

கரும்பு விவசாயி சின்னம் லக்கி இல்லை: டெல்லி ஐகோர்ட்

டெல்லி: கரும்பு விவசாயி சின்னம் உங்களுக்கு லக்கி இல்லை; அதனை மாற்றிவிடுங்கள்: டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் கருத்து தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது; உங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல; பின்னர் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும்? குறிப்பிட்ட வாக்கு சதவீதத்துடன் குறிப்பிட்ட எம்பி, எம்எல்ஏக்களை கொண்டுள்ள கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம் கிடைக்கும். தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்த முடியாது என்று நீதிபதி கூறினார். தொடர்ந்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

The post கரும்பு விவசாயி சின்னம் லக்கி இல்லை: டெல்லி ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Delhi ,Chief Justice ,Manmohan ,Nam Tamilar Party ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...