×

பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் என்ஐஏ விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்தது. மர்ம பொருள் வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் படுகாயமடைந்தனர். ஏற்கனவே வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துவரும் நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் என்ஐஏ விசாரணை appeared first on Dinakaran.

Tags : NIA ,Bengaluru ,National Investigation Agency ,Rameswaram Cafe ,Whitefield ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு...