×

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்

 

ஊட்டி, மார்ச் 1: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்களில் நாளை 2ம் தேதி சிறப்பு சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடக்கிறது. நீண்ட காலமாக கடன் நிலுவையில் உள்ள கடன்தாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். நீலகிரி மண்டல இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பண்ணை சாரா கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக சட்டசபையில் 2023-24ம் ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பாணையை வெளியிட்டார். இத்திட்டம், நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் 2ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடக்கிறது.

அதன்படி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. எனவே, கூட்டுறவு சங்கங்களில் நீண்ட காலமாக கடன் நிலுவையில் உள்ள கடன்தாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Debt Settlement Program Camp ,Ooty ,Program ,Nilgiri district ,Special Debt Settlement Program ,Banks ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...