×

(தி.மலை) அதிமுக நிர்வாகி வீட்டின் கதவு உடைத்து 35 சவரன், ₹50ஆயிரம் திருட்டு சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து சென்ற ஆசாமிகள் திருவண்ணாமலையில் மாப்பிள்ளை பார்க்க சென்றபோது

திருவண்ணாமலை, மார்ச் 1: திருவண்ணாமலையில் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வெளியூர் சென்றிருந்த அதிமுக நிர்வாகி வீட்டின் பூட்டு உடைத்து, 35 சவரன் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை குபேர நகரைச் சேர்ந்தவர் முருகன்(48). அதிமுக நகர பொருளாளர். மேலும், திருவண்ணாமலையில் திருமண மண்டபம் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக, கடந்த 27ம் தேதி குடும்பத்தினருடன் விருதுநகருக்கு சென்றிருந்தார். பின்னர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவை, இரும்பு ராடால் நெம்பி உடைத்திருந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த ெபாருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், ₹50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.
மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள், வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளுக்கான ஹார்டு டிஸ்கையும் திருடிச்சென்றது தெரியவந்தது.

எனவே, இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் முன் அனுபவம் உள்ள, தொழில்நுட்பத்தில் கைத்தேர்ந்த திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதோடு, வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்டு, திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசில் முருகன் கொடுத்த புகாரின் பேரில், டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைேரகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post (தி.மலை) அதிமுக நிர்வாகி வீட்டின் கதவு உடைத்து 35 சவரன், ₹50ஆயிரம் திருட்டு சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து சென்ற ஆசாமிகள் திருவண்ணாமலையில் மாப்பிள்ளை பார்க்க சென்றபோது appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,AIADMK ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Murugan ,Krivalabathi Kubera ,AIADMK… ,D.Malay ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...