×

விதிமீறல் விளம்பர தட்டிகள் அகற்றம்

 

ஈரோடு, மார்ச் 1: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், சாலையின் மையப்பகுதியில் விளம்பர தட்டிகள் வைக்க அனுமதியில்லை என்ற போதிலும் ஆங்காங்கே தனியார் நிறுவனங்களின் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதே போல சாலையின் இருபுறத்திலும் 3 மீட்டர் அகலத்திற்கு குறைவாக நடைபாதை இருந்தால் விளம்பர தட்டிகள் அனுமதியில்லை என்பதோடு, ஒரு விளம்பர தட்டிக்கும், மற்றொரு விளம்பர தட்டிக்கும் குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளி வேண்டும்.

மருத்துவமனை, பள்ளி வளாகம், வழிபாட்டு தலங்களுக்கு முன்பாக விளம்பர பலகை வைக்க அனுமதியில்லை. ஆனால் ஈரோட்டில் மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலையோரங்களில், சில தனியார் விளம்பர பதாகைகள் அனுமதியின்றி விளம்பர பலகைகளை வைத்திருப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் விதிமுறை மீறி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அப்புறப்படுத்தினர்.

The post விதிமீறல் விளம்பர தட்டிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Municipal Corporation ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது