×

ஜாதி, மத அடிப்படையில் கைதிகளை பிரிக்க கூடாது: மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: கைதிகளை ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சில மாநிலங்களின் ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் சிறைக்கைதிகளைப் பிரித்து வைப்பதாகவும், அதற்கேற்ப சிறைகளில் அவர்களுக்குப் பணி ஒதுக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகத்திற்கு வந்த தகவல் அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: இந்திய அரசியலமைப்பு மதம், இனம், சாதி அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவிதமான பாகுபாட்டையும் தடைசெய்கிறது. எனவே மாதிரி சிறைக் கையேடு உள்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. சமையலறையை நிர்வகிப்பதில் அல்லது உணவு சமைப்பதில் கைதிகளிடம் சாதி அல்லது மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது. குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்த கைதிகளின் குழுவிற்கு எந்தவொரு சிறப்பு வசதியும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலைகளில் ஜாதி அடிப்படையிலான பணி வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஜாதி, மத அடிப்படையில் கைதிகளை பிரிக்க கூடாது: மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Home Ministry ,NEW DELHI ,Union government ,
× RELATED சீக்கிய தீவிரவாதிகளிடம் கெஜ்ரிவால்...