×

பாஜ நடத்தியது பாத யாத்திரை அல்ல..இறுதி யாத்திரை… கி.வீரமணி விளாசல்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தி.க தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், 100 சதவீதம் தோல்வி அடைந்து விடுவோம் என்பதை உணர்ந்து விட்டார். அதன் அறிகுறிதான் அவரின் குழம்பிய பேச்சு. தமிழகத்தில் மோடி எது சொன்னாலும் எடுபடாது. இப்போது மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜ நடத்தியது பாதயாத்திரை அல்ல, தனது இறுதி யாத்திரை.மோடியால் எந்த பக்கமும் செல்ல முடியவில்லை. மோடி அரசின் ஏமாற்று வேலையை அனைவரும் உணர்ந்துள்ளனர். எனவே மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ நடத்தியது பாத யாத்திரை அல்ல..இறுதி யாத்திரை… கி.வீரமணி விளாசல் appeared first on Dinakaran.

Tags : Bajau ,Kumbakonam ,DK ,K. Veeramani ,Kumbakonam, Thanjavur district ,Modi ,Tamil Nadu ,BJP ,K. Veeramani Vlasal ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...