×

பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி தமாகா மாவட்ட நிர்வாகி காங்கிரசில் இணைந்தார்

நாகர்கோவில்: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பான்மையான நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக முடிவெடுத்த ஜி.கே.வாசன், பா.ஜவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தார். இதனால் அந்த கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. கூட்டணி அறிவித்த அடுத்த சில மணி நேரத்தில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் கிழக்கு தமாகா தலைவர் காளிமுத்து அவரது மனைவியுடன் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் நேற்று முன்தினம் இணைந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமாகா பொருளாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான டாக்டர் சிவகுமார் அந்த கட்சியில் இருந்து விலகி விஜய் வசந்த் எம்.பி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார்.

The post பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி தமாகா மாவட்ட நிர்வாகி காங்கிரசில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamaka ,Congress ,Nagercoil ,TAMAGA ,president ,GK Vasan ,AIADMK ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...