×

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 10,01,592 புதிய பயனாளிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 10,01,592 பேர் புதிய பயனாளிகளாக சேர்ந்து இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலை, அரசு பெண்கள் (மாந்தோப்பு) மேனிலைப்பள்ளியில் முதல்வரின் விரிவான முதல்வர் காப்பீட்டு திட்ட முகாமில் 1013 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1.44 கோடி பயனாளி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடைந்திருக்கிறார்கள். தற்போது 8 வகையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. உயர் அறுவை சிகிச்சைகளுக்கு இக்காப்பீட்டு திட்டம் பயன்பெற்று வருகிறது.

அதன்மூலம் ஒவ்வொரு பயனாளிகளும் ரூ.5 லட்சம் தொடங்கி ரூ.22 லட்சம் வரை பயன்பெற்று வருகிறார்கள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதிதாக இந்த திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை 10,01,592 பேர். 33 மாதத்தில் புதிய பயனாளிகளாக சேர்ந்திருக்கிறார்கள். மார்ச் 15க்கு பிறகு கோடை காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும், என்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தகவலை முகாம் மூலம் அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 10,01,592 புதிய பயனாளிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M.Subramanian ,CHENNAI ,M. Subramanian ,Chief Minister ,DMK government ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்