×

தாவுத் கூட்டாளி அப்துல் கரீம் விடுவிப்பு

ஜெய்ப்பூர்: கடந்த 1993ம் ஆண்டு முதலாம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 5-6ம் தேதி இரவில் லக்னோ, கான்பூர், ஐதராபாத், சூரத் மற்றும் மும்பையில் அடுத்தடுத்து பயணிகள் ரயிலில் குண்டு வெடித்தது. இது தொடர்பான வழக்கில் இர்பான், ஹமிதுத்தி, அப்துல் கரீம் துண்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இர்பான் மற்றும் ஹமிதுத்தி ஆகியோருக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தேடப்படும் தீவிரவாதியான தாவூத் இம்ராகிமிற்கு நெருங்கிய கூட்டாளியான அப்துல் கரீம் துண்டாவை(81) தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தடா நீதிமன்றம் விடுவித்துள்ளது.

The post தாவுத் கூட்டாளி அப்துல் கரீம் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Daoud ,Abdul Karim ,Jaipur ,Babri Masjid demolition ,Lucknow ,Kanpur ,Hyderabad ,Surat ,Mumbai ,Irfan ,Hamiduti ,Dawood ,Dinakaran ,
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...