×

தனியார் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் வகுப்பு: விரைவில் தொடக்கம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் இருந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. எனவே திருமங்கலம் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள 10 கி.மீ தூரத்திற்குள் மாணவர்கள் தங்கி படிக்க தேவையான அனைத்து வசதிகளுடனும் கூடிய தற்காலிக கல்லூரி வளாகத்தை வாடகைக்கு அமர்த்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து 50 பேர் அமரக்கூடிய வகையில் 2 வகுப்பறைகள், ஒரு பயிற்சி கூடம், 50 பேர் அமரும் வகையில் ஒரு தேர்வு அறை, ஆயிரம் சதுர அடியில் ஒரு ஆய்வகம், 1000 சதுர அடியில் ஒரு கம்ப்யூட்டர் லேப், 500 சதுர அடியில் 6 எண்ணிக்கையில் ஆசிரியர் அறை, நிர்வாக அறை, 37 அறைகள் கொண்ட ஆண்கள் விடுதி, 21 அறை கொண்ட பெண்கள் விடுதி, அதற்கான கழிப்பிடம், குளியல் அறை வசதி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகள் அடங்கிய தற்காலிக கல்லூரி வளாகத்திற்கு வடகைக்கான டெண்டர் கோரப்பட்டு அதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மதுரை திருமங்கலம் அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றை தேர்வு செய்துள்ளனர். இதற்கான பணிகள் இன்னும் சில வாரங்களில் முடிவடையும்; அதன் பின்னர் அந்த கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்கள் தங்கி தங்கள் மருத்துவ படிப்பை தொடர்வதுடன், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெறுவர் என அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

The post தனியார் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் வகுப்பு: விரைவில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai AIIMS Medical College ,Ramanathapuram Medical College ,Thirumangalam Government Hospital ,Tirumangalam Government Hospital ,Madurai AIIMS ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...